சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, 5, 6-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 7, 8-ம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
4-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் ஊட்டியில் 6.4 டிகிரி, கொடைக்கானலில் 6.6 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவானது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.