”திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது; மதத்திற்கு அல்ல” – முதலமைச்சர்

திமுக அரசு மதவாதத்திற்கு தான் எதிரானது, மதத்திற்கு அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2 ஆயிரத்து 500 கோயில்களின் திருப்பணிகளுக்கு தலா 2 லட்சம் வீதம் 50 கோடி ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார்.

அதில் உரையாற்றிய அவர், நமது கலாச்சார சின்னமாகவும், சிற்ப திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கும் கோயில்களை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.