நாளை (ஜனவரி 6ம் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நாளை (ஜனவரி 6ம் தேதி) அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய வரும் ஜனவரி 21ம் தேதி வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.