செங்கல்பட்டு மாவட்ட ஜாக்டோஜியோ அமைப்பின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முகமதுஉசேன் சீனுவாசன் ஆகியோர் தலைமையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட மாநில நிர்வாகிகள் உதயசூரியன் மற்றும் மத்தியேயு ஆகியோர் பேசுகையில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்; மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசு துறைகளில் அரசாணை 115, 139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும்; அதேபோல் இளைஞர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கும் ’அவுட்சோர்சிங்’ முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் உயர் மட்ட குழு உறுப்பினர் சேகர் தலைமையில் ஆர்பாட்டமானது நடைபெற்றது இதனை உயர்மட்ட குழு உறுப்பினர் ஜனார்த்தனர் துவங்கி வைத்தார். இதில் பாபு, சீனிவாசன் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அகவிலைப்படி 4 சதவிகிதம் வழங்கிடவும் சரண்விடுப்பை தடை ஆணையை ரத்து செய்து சம்பளம் பெற தமிழக அரசு உத்தரவினை வழங்க வேண்டும, தனியாரிடம் அரசு பணிகளை ஒப்படைக்கும் முறையையும் கைவிட்டு அரசாணைகள் 115,139,152 ஆகியவைகளை ரத்து செய்ய வேண்டும் தொகுப்பூதியம், சிறப்பு ஊதியம், மதிப்பூதியம் போன்றவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி மற்றும் அரசுதுறையில் பணிபுரியும் ஊழியர்களை அத்துக்கூலிகளாக மாற்றும் அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்ய வேண்டும், அதே போல் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினார்கள்