Passport Apply: நீங்கள் இந்தியாவிற்கு வெளியே எங்காவது செல்ல விரும்பினால், பாஸ்போர்ட் வைத்திருப்பது முக்கியம். சில நாடுகளை தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் செல்ல வேண்டும் என்றால், பாஸ்போர்ட் கட்டாயம் தேவை. பாஸ்போர்ட்டைப் பெற, சில விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள முறைகள் என்ன? ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்? பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன? பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் எவ்வளவு? என அனைத்தையும் மனதில் வைத்து, நிறைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வழிமுறைகள் மிகவும் முக்கியமானது. அதே சமயத்தில் ஆனால் மிகவும் சாதாரணமானது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் இடை தரகர்களிடம் செல்ல வேண்டியதில்லை. சில வழிமுறைகளை நீங்கள் தெரிந்துக்கொண்டால் எளிதாக பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில் இப்போது நீங்களே ஆன்லைனில் விண்ணப்பிப்பதன் மூலம் பாஸ்போர்ட் பெறலாம். இதற்கான முக்கியமான செயல்முறையை என்ன என்பதைப் பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு பொதுத்துறை அலுவலகத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, இப்போது நீங்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க விரும்பினால், சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையைக் குறித்து பார்ப்போம்.
ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை
புதிய பாஸ்போர்ட் பெற வேண்டும் என்றால், https://www.passportindia.gov.in/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டியது அவசியம். இந்த இணையதளத்தை பார்வையிட்ட பிறகு நீங்கள் பதிவு செய்ய வேண்டும். இதனுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பதிவுசெய்தவுடன், இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடியில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயர், முகவரி, மொபைல் எண், சரியான பிறந்த தேதி போன்ற உங்கள் பொதுவான தகவல்களை நிரப்ப வேண்டும். இது தவிர, உங்கள் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்தும் தகவலைப் பெறலாம்.
உங்களைக் குறித்தத் தகவலை நிரப்புவற்கு, நீங்கள் பாஸ்போர்ட் சேவா (Passport Seva) என்ற விருப்பத்திற்குச் செல்ல வேண்டும், அங்கு தொடரவும் (Continue) என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வ்நெடும். இதற்குப் பிறகு, புதிய பாஸ்போர்ட்டிற்கான விண்ணப்பம்/பாஸ்போர்ட் புதுப்பிப்பு (Apply for Fresh Passport/Reissue of Passport) என்ற விருப்பத்திற்குச் செல்ல வேண்டும்.
இதற்குப் பிறகு, கிளிக் செய்து நிரப்பவும் (Click Here To Fill) என்ற விருப்பத்தை கிளிக் செய்து, அடுத்த பக்கத்திற்குச் சென்று அங்கு உங்களிடம் கேட்கப்பட்ட தகவல்களை நிரப்புவது முக்கியம்.
இதற்குப் பிறகு நீங்கள் சமர்ப்பி (Submit) பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும், பின்னர் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு (Passport Office) செல்ல அப்பாயின்ட்மென்ட் வாங்க வேண்டும்.
உங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆன்லைனில் டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகு, விண்ணப்பக் கட்டணத்துடன் சேர்ந்து அனைத்தையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
இதற்குப் பிறகு, உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தவுடன் அருகிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சான்றிதழ், உங்கள் அடையாள அட்டை மற்றும் தேவையான பிற ஆவணங்களை எடுத்து சென்று சரிபார்த்து மேலும் செயல்முறையை முடிக்க வேண்டும்.
அனைத்து தகவல்களையும் கொடுத்த பிறகு, போலீஸ் கிளியரன்ஸ் (Police Verification) சான்றிதழ் தேவைப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தையும் முடித்த பிறகு, நீங்கள் எளிதாக பாஸ்போர்ட் பெறலாம்.