சாகர் : மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்ட பா.ஜ., நிர்வாகியாக இருந்தவர் மிஷ்ரி சந்த் குப்தா. கடந்த மாதம் 22ல், குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து, பால் பண்ணை தொழிலாளி ஜகதீஷ் யாதவ் மீது கார் ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, கட்சியில் இருந்து மிஷ்ரி சந்த் குப்தா ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.இந்நிலையில், மிஷ்ரி சந்த் குப்தாவுக்கு சொந்தமான ஹோட்டல், கலெக்டர் தீபக் ஆர்யா, டி.ஜ.ஜி., தருன் நாயக் ஆகியோர் முன்னிலையில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மிஷ்ரி சந்த் குப்தா மனைவி மீனாவை, 83 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் கிரண் யாதவ் என்பவர் தோற்கடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மிஷ்ரி சந்த் குப்தா, கிரண் யாதவ் உறவினரான ஜக்தீஷ் யாதவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மிஷ்ரி சந்த் குப்தா தலைமறைவாக உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement