பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது சிறுவன் திடீர் சாவு

திருப்பூர்: திருப்பூர் பிச்சம்பாளையம் அடுத்த குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (29). கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வஞ்சிக்கொடி. இவர்களது 3 வயது மகன் சஞ்சய், நேற்று முன்தினம் மதியம் பிஸ்கட் சாப்பிட்டுவிட்டு தூங்கினான். மாலை நீண்ட நேரம் ஆகியும் படுக்கையில் இருந்து எழாததால் சந்தேகம் அடைந்த வஞ்சிக்கொடி, மகனை எழுப்பிபோது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தான். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், சஞ்சய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.