சில நாட்களாக பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்து விபத்துக்குள்ளாவது ஒரு தொடர்கதையாகி வந்தது. இந்நிலையில் இந்த விபத்தைத் தவிர்ப்பதற்கு, இருபது கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில், பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியப்படி மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால், ஏராளமான மாணவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
இந்த விபத்துகளைத் தவிர்ப்பதற்கு போக்குவரத்து துறை சார்பில் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முதல் கட்டமாக பெரம்பூர் மற்றும் எழும்பூர், போரூர் மற்றும் குன்றத்தூர் உள்ளிட்ட பன்னிரண்டு வழித்தடங்களில் இருபது கூடுதல் பேருந்துகளை இயக்க சென்னை போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.