விமானத்தில் பெண்ணின் போர்வை மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி: அதிர்ச்சி தரும் மற்றொரு சம்பவம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணியின் மீது போதை ஆசாமி ஒருவர் சிறுநீர் கழித்த செய்தி வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது நடந்த 10 நாட்களுக்குள் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த டிசம்பர் 6-ம் தேதி பாரிசில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணின் போர்வை மீது ஒரு குடிபோதை ஆசாமி சிறுநீர் கழித்ததாக செய்தி வௌியாகி உள்ளது.

“டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகளிடம் இதுகுறித்து விமானி தெரிவித்துள்ளார். உடனே, குடிபோதையில் இருந்த அந்த நபரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். அந்த நபர் எழுத்துப்பூர்வமாக  மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்ததால் அவர் விடுவிக்கப்பட்டார்” என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.