ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை இன்று (05) களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பித்தது.
களுத்துறை மாவட்ட செயலகத்தில் அந்த கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் குழு உறுப்பினர்கள் இந்த வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டார்.