2024 எம்பி எலக்ஷன்… தமிழ்நாட்டில் போட்டியிட்டால் மோடி இந்த தொகுதியில்தான் நிற்பாராம்!

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை சந்திப்பதற்காக அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிட்டாலும் சரி… கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சரி… குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் தாமரை மலர்ந்தே தீர வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அண்ணாமலை வாய்மொழி உத்தரவை எப்போதோ பிறப்பித்துவிட்டார்.

எம்பி எலக்ஷனில் ஜெயிக்க, தமிழ்நாட்டில் பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதால், திமுகவினர் மிகவும் கவனமுடன் தீவிரமாக களப்பணி ஆற்றி தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றிக் கனியை பறிக்க வேண்டும் என்ற கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அன்பு கட்டளை இட்டுள்ளார்.

இப்படி 2024 தேர்தல் ஆயத்தப் பணிகள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க, மறுபுறம் எதிர்வரும் எம்பி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட வேண்டும்; இது தமிழக பாஜகவின் விருப்பம் மட்டுமல்ல; பாஜக தொண்டர்களின் விருப்பமும்கூட என்று கொளுத்திப் போட்டியிட்டுள்ளார் தாமரை கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை.

2024 எம்பி தேர்தலில் மோடி மதுரை தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று மதுரை மாவட்ட பாஜக நிர்வாகிகள் சில, பல மாதங்களுக்கு முன்பே தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.தற்போது அண்ணாமலையும் இந்த கோரிக்கையை வைத்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் இருந்து மோடி போட்டியிடுவாரா, அப்படியொரு சம்பவம் நிகழ்ந்தால் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்பன போன்ற ஆவல் கலந்த கேள்விகள் மக்கள் மன்றத்திலும், அரசியல் அரங்கிலும் எழுந்துள்ளன.

, மோடி தமிழ்நாட்டில் போட்டியிட முடிவெடுத்தால், காசியுடன் ஆன்மிக ரீதியாக தொடர்புடையது என்பதால்அவர் ராமேஸ்வரம் தொகுதியை உள்ளடக்கிய ராமநாதபுரத்தில் இருந்துதான் போட்டியிடுவார் என்றொரு கருத்து அரசியல் அரங்கில் உலவி வருகிறது.

அப்போ மோடி போட்டியிட போவது மதுரையா, ராமநாதபுரமா? இரண்டும் இல்லை என்கிறார் வலதுசாரி சிந்தனையாளரும், பாஜக ஆதரவாளருமான பெயர் வெளியிட விரும்பாத அந்த நபர்.

” உத்தரப் பிரதேசம், குஜராத் என வடமாநிலங்களில் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் மோடிக்கு எளிதான விஷயம். அதனையும் தாண்டி அவர் தமிழ்நாட்டில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். அதேசமயம் சமீபத்தில் கேரளாவில் நடத்தப்பட்ட பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலைக்காக கூடிய கூட்டத்தை கட்சியின் டெல்லி தலைமை மிகவும் பாசிடிவ்வாக கருதுகிறது.

எனவே, 2024 தேர்தலில் தமிழ்நாட்டில் 25 இட்ங்களில் மட்டுமல்லாமல், கேரளாவிலும் 10 இடங்களில் தாமரையை மலர செய்யும் பொறுப்பும் அண்ணாமலையிடம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்படி அவருக்கு தேர்தலில் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டால், அதற்கு ஈடாக மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் வலுவாக வைக்கலாம்.

அந்த கோரிக்கையை கட்சியின் டெல்லி தலைமை ஏற்றுக்கொண்டால், மோடி திருச்சி தொகுதியில் இருந்து போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் நிச்சயம் ராமநாதபுரத்தில் போட்டியிடமாட்டார். மதுரையிலும் போட்டியிட வாய்ப்பில்லை என்கிறார் அவர் தீர்க்கதரிசனத்துடன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.