புதுடில்லி: அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு பெற்ற ஜம்மு-காஷ்மீர் மாநில வீரர்கள் நேற்று ராணுவ தலைமையகத்தில் பயிற்சியில் பங்கேற்றனர்.
நம் ராணுவத்தில், ‘அக்னி வீரர்’கள் என்ற புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அக்னிபத் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதன்படி முதல்கட்டமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து தேர்வு பெற்ற 300-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு லெப்டினன்ட் ஜெனரல் திவேதி தலைமையில் 21 வாரங்கள் ராணுவ பயிற்சி அளிக்கப்பட உள்ளது.நேற்று அவர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement