இலங்கை அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோற்றது குறித்து அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா
இலங்கை – இந்தியா மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சு பேட்டிங் என இரண்டிலும் நாங்கள் பவர்ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே உண்மை.
அதை ஏற்றுக்கொள்ள முடியாது
நாங்கள் சில அடிப்படையான விசயங்களை கூட சரியாக செய்யவில்லை. பந்துவீச்சாளர்கள் அதிகமான ரன்கள் விட்டுகொடுப்பது கூட இயல்பான விசயம் தான், ஆனால் நோ-பால் வீசுவது குற்றம், அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அர்ஸ்தீப் சிங் இதற்கு முன்பும் அதிகமான நோ-பால்கள் வீசியுள்ளார்.
நான் அவர் மீது பழீ சுமத்த விரும்பவில்லை ஆனால் நோ-பால்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அர்ஸ்தீப் சிங் தனது தவறுகளை விரைவாக திருத்தி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.