இளவரசர் ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேற காரணமாக அமைந்த ஒற்றை புகைப்படம் இதுதான்…


ராஜ குடும்பமே தங்களுக்கு எதிராக இருப்பதை ஹரியும் மேகனும் அந்த ஒற்றை புகைப்படத்தைப் பார்த்து உணர்ந்துகொண்டுள்ளார்கள்.

மூத்த ராஜ குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறிய ஹரியும் மேகனும்

2020ஆம் ஆண்டு, மூத்த ராஜ குடும்ப உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஹரியும் மேகனும் வெளியேறினார்கள். அவர்கள் அந்த முடிவை எடுப்பதற்கு ஒரு புகைப்படம் முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவிக்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.

தங்களுக்கு ராஜ குடும்பத்தில் எதிர்காலம் இல்லை என்பதை ஹரி மேகனுக்கு அந்த படம் உணர்த்தியதாக தெரிவிக்கிறார் Andrew Morton என்னும் ராஜ குடும்ப நிபுணர்.

இளவரசர் ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேற காரணமாக அமைந்த ஒற்றை புகைப்படம் இதுதான்... | Harry Meghan Markle Evidence Royal Family Queen

Image: Ranald Mackechnie via Getty Images

அது என்ன புகைப்படம்?

ஹரி மேகனுக்கு கவலையை ஏற்படுத்தி அவர்களை அப்செட்டாக்கிய அந்த புகைப்படத்தில், மகாராணியார், இளவரசர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் வில்லியமுடைய மகனான குட்டி இளவரசர் ஜார்ஜ் ஆகியோர் காணப்படுகின்றனர்.

அதாவது, ஆட்சியிலிருப்பவர் மற்றும் அடுத்தடுத்து ஆளப்போகிறவர்கள் அந்த புகைப்படத்தில் இருந்தார்கள். மகாராணியார், அவருக்குப் பிறகு சார்லஸ், அவருக்குப் பிறகு அவரது மகன் வில்லியம், அடுத்து வில்லியமுடைய மகன் ஜார்ஜ். இவர்கள்தான் அரியணை ஏறும் வரிசையிலிருப்பவர்கள்.

இளவரசர் ஹரியும் மேகனும் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேற காரணமாக அமைந்த ஒற்றை புகைப்படம் இதுதான்... | Harry Meghan Markle Evidence Royal Family Queen

Image: Getty

ஆக, தான் முக்கியமில்லை, தானும் தன் மனைவி மேகனும் இல்லாவிட்டாலும் மன்னராட்சி தொடரும் என்பதை ஹரிக்கு உணர்த்தி, அவர்கள் ராஜ குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்கள் அல்ல என சமிக்ஞை கொடுக்கும் ஒரு படம் அது என்கிறார் Andrew Morton என்னும் ராஜ குடும்ப நிபுணர்.

ராஜ குடும்ப அமைப்பு முழுவதுமே தங்களுக்கு எதிராக சதி செய்வதாக சந்தேகித்த ஹரியும் மேகனும், அந்த புகைப்படத்தை அதற்கு ஒரு ஆதாரமாக பார்த்துள்ளார்கள்.

அந்த புகைப்படம் வெளியான பிறகுதான் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியதுடன், பிரித்தானியாவை விட்டும் வெளியேறிவிட்டனர் ஹரி மேகன் தம்பதியர்!
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.