தாலிபான் தீவிரவாதிகள் பலரை சதுரங்க காய்கள் போல கொன்று தள்ளியதாக கூறிய ஹரியின் பேச்சுக்கு தற்போது தாலிபான்கள் பதிலளித்துள்ளனர்.
இளவரசர் ஹரி, போர்க்களத்தில்
கொண்ட கொள்கைக்காக போராடியவர்கள் தாலிபான்கள் எனவும், அவர்கள் வெரும் சதுரங்க காய்கள் அல்ல எனவும் அவர்களும் மனிதர்கள் தான் என மூத்த தாலிபான் தலைவர் ஒருவர் பதிலளித்துள்ளார்.
அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் தமது நினைவுக்குறிப்பில் இளவரசர் ஹரி, போர்க்களத்தில் எதிர்கொண்ட தமது அனுபவங்களையும் பதிவு செய்துள்ளார்.
@ap
அதில், எதிரிகளின் உயிர்களை பறித்தது, அவர்களும் மனிதர்கள் என கருதியல்ல, வெறும் சதுரங்க காய்கள் என கருதித்தான் என்றார்.
மேலும் மொத்தம் 25 தாலிபான்களை தாம் கொன்று குவித்ததாகவும் ஹரி தமது நினைவுக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விடயம் தொடர்பில் தற்போது தாலிபான் மூத்த தலைவர்களில் ஒருவரன Anas Haqqani பதிலளித்துள்ளார்.
போர்க்குற்றங்களை எவரும் பேசியதில்லை
ஹரி, நீங்கள் கொன்றதாக கூறப்படும் நபர்களுக்கும் குடும்பங்கள் உண்டு, அவர்கள் வீடு திரும்புவதையும் எதிர்பார்த்து அவர்கள் காத்திருப்பார்கள்.
ஆப்கானிஸ்தான் மக்களை வேட்டையாடிய பலரும் இதுபோன்று வீரம் பேசியதில்லை, உங்களைப் போன்று போர்க்குற்றங்களை எவரும் வெளிப்படையாக பேசியதில்லை.
@getty
இந்த விவகாரம் என்னை தலைகுனிய வைக்கவில்லை, இதில் நான் வெட்கப்படவும் இல்லை என Anas Haqqani குறிப்பிட்டுள்ளார்.
இன்னொரு தாலிபான் தளபதி கூறுகையில், தற்போதைய சூழலில் ஹரிக்கு தேவை ஒரு மருத்துவரின் சேவை, அவர் மக்களின் கவனத்தை பெற உளறுகிறார் என காட்டமாக தெரிவித்துள்ளார்.