மேகன் மெர்க்கல் தொடர்பில் இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி கைகலப்பில் ஈடுபட்டு, ஹரி ரத்த காயத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், சகோதரர்களிடையேயான இந்த சண்டையில் யார் வெல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோபத்தை தூண்டிய வில்லியம்
இளவரசர் ஹரி வெளியிடவிருக்கும் Spare என்ற தமது நினைவுக் குறிப்பில், 2019ல் மேகன் தொடர்பில் எழுந்த காரசாரமான வாக்குவாதத்தின் நடுவே வில்லியம் தம்மை காயப்படுத்தியதாக ஹரி அம்பலப்படுத்தியுள்ளார்.
@getty
மேகன் முரட்டுக்குணம் கொண்டவர், புரிந்துகொள்ள முடியாதவர் என்பது போன்ற காயப்படுத்தும் வார்த்தைகளால் வில்லியம் ஹரியின் கோபத்தை தூண்டியுள்ளார்.
மட்டுமின்றி, இழிவான சொற்களால் ஹரியை வசைபாடிய வில்லியம் ஒருகட்டத்தில் ஹரியின் கழுத்தைப் பிடித்து நெட்டித்தள்ளியுள்ளார்.
தாம் அப்போதும் பொறுமை காத்ததாகவும், திருப்பியடித்தால் என்னவாகும் நிலைமை எனவும் ஹரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹரியின் கை ஓங்கும்
சகோதரர்கள் இடையே நடந்த அந்த கைகலப்பில் வில்லியம் வென்றிருந்தாலும், ஹரியின் பொறுமை மற்றும் துணிவை தற்போது பாராட்டுகிறார்கள்.
இன்னொரு மோதலில் சகோதரர்கள் இருவரும் களம் கண்டால், கண்டிப்பாக இந்தமுறை ஹரியின் கை ஓங்கும் என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வில்லியம் தமது மொத்த குடும்பத்தின் ஆதரவையும் பெறலம் ஆனால் ஹரி தற்போது தனித்துவிடப்பட்டாலும், அவர் ஒரு போரளி என்கிறார் ஒருவர்.
@getty
40 வயது வில்லியம் அனுபவசாலியாக இருந்தாலும், ஹரி கொஞ்சம் துணிவு மிகுந்தவர் என குறிப்பிடுகிறார் ஒருவர்.
ஆனாலும் வில்லியம் பாடசாலை காலத்திலேயே முரட்டு குணம் கொண்டவர் எனவும் அப்படியான ஒரு இரட்டைப்பெயர் அவருக்கு இருப்பதாக ராஜகுடும்பத்து வரலாற்று ஆசிரியர் ஒருவர் கூறுகிறார்.
எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவர் மற்றும் ஒழுக்கத்தை மீறுபவர், சக மாணவர்களின் கோபத்தை தூண்டுபவர், சாப்பாட்டு வேளைகளில் வரிசையை கலைப்பவர், விளையாட்டு மைதானத்தில் சண்டை போடுபவர் என நீண்ட பட்டியல் போடலாம் என்கிறார் அந்த ஆசிரியர்.