கர்ப்பிணி எம்.பி.,யை தாக்கிய 2 எம்.பி.,க்களுக்கு 6 மாதம் சிறை| 2 MPs jailed for 6 months for assaulting pregnant MP

தாகர் : செனகல் நாட்டு பார்லிமென்டில் கர்ப்பிணி எம்.பி.,யை தாக்கிய இரண்டு எம்.பி.,க்களுக்கு, தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேற்கு ஆப்ரிக்க நாடான செனகல் பார்லி.,யில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் மோதலாக மாறியது.

அப்போது, ஆளுங்கட்சி எம்.பி.,யான ஆமி என்டியாயோ கினிபியை, எதிர்க்கட்சி எம்.பி., மசாதா சாம்ப், கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு தாக்க முயன்ற கினிபியின் வயிற்றில் மசாதாவும், மற்றொரு எம்.பி.,யான மாமடோவ் நியாங்கும் எட்டி உதைத்தனர்.

இந்த சம்பவம் நடந்தபோது கினிபி கர்ப்பமாக இருந்தார். இதையடுத்து, தன்னை கண்மூடித்தனமாக தாக்கிய எம்.பி.,க்கள் மீது, நீதிமன்றத்தில் கினிபி வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது. மசாதா மற்றும் நியாங் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இருவருக்கும் தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.