களனிவெளி ரயில் பாதையினூடாக ‘சீதாவக ஒடிஸி’ என்ற பெயரில் புதிய ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் கொழும்புப் பிரதேசத்தில் முக்கிய இடங்களை இலகுவாக சென்றடையக் கூடிய வகையில் இந்த ரயில் சேவை இடம்பெறும்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த புதிய ரயில் சேவை இடம்பெறும்.
இந்த ரயில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து வக புகையிரத நிலையம் வரை பயணிக்கும். இது முக்கியமான இடங்களைப் பார்வையிடுவதற்காக நிறுத்தப்படும்.