சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே, இந்தாண்டின் முதல் மஞ்சுவிரட்டு போட்டி, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
தைப்பொங்கல் விழாவை வரவேற்கும் விதமாக, மு.சூரக்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில், புதுக்கோட்டை, மதுரை உள்பட பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கோவில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து, பிற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு, களமாடின….
காளைகளை அடக்க முயன்ற சுமார் 27 பேர் காயமடைந்தனர்.