ஜார்க்கண்ட் அரசைக் கண்டித்து சென்னையில் ஜெயின் சமூகத்தினர் பேரணி 

சென்னை: ஜெயின் புனித தளத்தை ஜார்க்கண்ட் அரசு சுற்றுலா தளமாக அறிவித்ததை எதிர்த்து சென்னையில் ஜெயின் சமூகத்தினர் பேரணியில் ஈடுபட்டனர்.

ஜெயின் புனித தளமான ஸ்ரீ சம்மேத் ஷிகர்ஜியை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான ஜார்க்கண்ட் அரசின் முடிவு பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீ சம்மேத் ஷிகர்ஜியை சுற்றுலா மையமாக மேம்படுத்தும் ஜார்க்கண்ட் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஜெயின் சமூகத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் பல நகரங்களில் ஜெயின் சமூகத்தினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், பேரணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன்படி சென்னையில் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூக மக்கள் கலந்து கொண்ட கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் இன்று (ஜன.6) நடைபெற்றது. சிந்தாதிரிப்பேட்டை பாலம் அருகில் உள்ள ஜெயின் கோயிலில் தொடங்கி ராஜரத்தினம் மைதானம் வரை கண்டனப் பேரணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.