தமிழகத்தில் இருந்து சாப்ட்வேர் துறையில் ரூ.1.70 லட்சம் கோடி ஏற்றுமதி: அமைச்சர் தகவல்

நெல்லை: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ‘டெஸ்டினேசன் நெல்லை’ என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பொறியியல் பட்டதாரி மாணவர்கள், புத்தாக்க தொழில் முனைவோர், அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.  இதில், அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: தமிழக முதல்வரின் முயற்சியால் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை நன்கு வளர்ச்சியடைந்து அனைவரும் பேசும் துறையாக மாறியுள்ளது.

சைபர் பாதுகாப்புக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்துறை முக்கிய சாதனைகளை படைத்துள்ளது. தமிழகத்தில் சாப்ட்வேர் துறையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் ஒரு லட்சத்து 243 கோடி ரூபாய்க்கும், மற்றவை மூலம் ரூ.70 ஆயிரம் கோடிக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளது. வரும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் தனி நபர் வருமானம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.