தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என அழைப்பதை விடுத்து தமிழகம் என அழைப்பது சரியாக இருக்கும் என தெரிவித்திருக்கும் கருத்து பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பேசிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதற்கு கட்சி மாறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் ஓரணியில் நின்று கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
திமுக தரப்பில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு விடுத்திருக்கும் அறிக்கையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக பாஜக தலைவர் போல் செயல்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பிரிவினையை தூண்டும் வகையில் சர்ச்சைக் கருத்துக்களை பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், திக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து #தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அறிஞர் அண்ணா, சென்னைக்கு தமிழ்நாடு என பெயர்ச்சூட்டி தீர்மானம் நிறைவேற்றினார்.
Call My State ‘Tamil Nadu’
– C.N.Annadurai #TamilNadu #தமிழ்நாடு #தமிழ்நாடுவாழ்க pic.twitter.com/siu1MWqA3d— Jokin (@Jokinjpaul) January 6, 2023
இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பெயர்சூட்டப்பட்டது. இதன் வரலாறு குறித்தும், தமிழ்நாட்டின் அரசியல் பின்னணி குறித்தும் எடுத்துரைத்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெட்டிசன்கள் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.