பிறந்தநாள் கொண்டாட நடிகர் யஷ் குடும்பத்தினருடன் துபாய் பயணம்

பெங்களூரு:

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் யஷ். இவர் நடிப்பில் வெளியான கே.ஜி.எப்.-1 மற்றும் கே.ஜி.எப்.2 படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. மேலும் வசூலில் இந்திய அளவில் பெரும் சாதனையையும் படைத்துள்ளது. இ்ந்த நிலையில் யஷ்சுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தநாள் ஆகும். எப்போதும் ரசிகர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடி வந்த நடிகர் யஷ், தவிர்க்க முடியாத காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடாமல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகர் புனித்ராஜ்குமார் மறைவால் தனது பிறந்தநாளை யஷ் புறக்கணித்தார். இதனால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளையொட்டி தங்களை யஷ் சந்திப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு நடிகர் யஷ் தனது மனைவி ராதிகா பண்டிட், 2 குழந்தைகளுடன் துபாய்க்கு பறந்துவிட்டார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் யஷ் தனது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

முன்னதாக, அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் வணக்கம் அன்பான ரசிகர்களே… உங்கள் கறைபடியாத அன்பு, ஈடு இணையற்ற அபிமானம் என் மனதை நிரப்புகிறது. சமீப ஆண்டுகளாக எனது பிறந்தநாளை உங்கள் நாளாக கொண்டாடி வந்தீர்கள். அதுபோல் நானும் எனது பிறந்தநாளையொட்டி உங்களை நேரில் பார்க்க விரும்பினேன். உங்களுடன் நேரத்தை செலவிட ஆசைப்பட்டேன். ஆனால் உலகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் முன் நான் நிற்க சில காலம் ஆகும். அதுவரை உங்கள் பொறுமையும், அன்பும் தான் எனக்கு இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசு. கூடியவிரைவில் உங்களை நேரில் சந்திப்பேன். அப்போது உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.