புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அசாம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருப்பதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கான பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்று கூறிய வருவாய்த்துறை அதிகாரிகள், மாற்று தேதி அறிவித்து ஒத்தி வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ஊர் பொதுமக்கள் இரவிலும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.