புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்தமே 8.40 லட்சம் வாக்காளர்கள்தான் உள்ளனர். இது, சோழிங்கநல்லூர் தொகுதியை ஒப்பபிடுகையில் கொஞ்சம்தான் அதிகமாக உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் புதுச்சேரி கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வல்லவன் நேற்று வெளியிட்டார். இதனை அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர். அதன்படி புதுச்சேரி, மாகே மற்றும் ஏனாம் மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 40 ஆயிரத்து 123 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 95 ஆயிரத்து 974 பேரும், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 44 ஆயிரத்து 027 பேரும் மூன்றாம் பாலினத்தவர்கள் 122 பேரும் உள்ளனர். இதில் அதிக பட்சமாக வில்லியனூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 241 பேரும், பெண் வாக்காளர்கள் 22 ஆயிரத்து 995 பேரும் என மொத்தம் 44,241 வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியில் மொத்தமே 8.40 லட்சம் வாக்காளர்கள்தான் உள்ளனர். இது, தமிழகத்தின் சோழிங்கநல்லூர் தொகுதியை விட கொஞ்சம்தான் அதிகம். சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரியுடன் ஒப்புடுகையில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களே உள்ளனர்.