புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள், ஊழியர்களுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) கடிதம் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 26 ம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது போதையில் இருந்த சக ஆண் பயணி சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் ஜனவரி 4-ம் தேதி புகார் தெரிவித்தது.
அந்த புகாரின்படி, விமான நிறுவன அதிகாரிகள் பயணிகளை சரியாக கையாள தவறி விட்டதாக தெரிய வருவதாகவும், இது விமான நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பு பற்றி கவலைப்படவில்லை என்பது தெரிய வருவதாகவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள், ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு டிஜிசிஏ கடிதம் அனுப்பி உள்ளது.