உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் அந்நாட்டின்மீது தடைகள் விதித்தன.
அப்படி தன் நாட்டிலுள்ள தடைகள் விதிக்கப்பட்ட ரஷ்யாவுக்கு சொந்தமான முடக்கப்பட்ட சொத்துக்களை உக்ரைனைக் கட்டியெழுப்ப கொடுக்கலாம் என ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
ரஷ்யா கோபம்
ஆனால், ஜேர்மனியின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை ஆத்திரப்படுத்தியுள்ளது. அப்படி தடை செய்யப்பட்டதால் முடக்கப்பட்ட சொத்துக்களை உக்ரைனுக்குக் கொடுப்பது சர்வதேச சட்டத்துக்கு முரணானது என்று கூறியுள்ள ரஷ்யா, அது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அதாவது, ஜேர்மனி முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்குக் கொடுத்தால், மற்ற நாடுகளும் அதேபோல செய்ய முற்படலாம் என்று கூறியுள்ளது.
பழிக்குப் பழி வாங்குவோம்
அப்படி ஜேர்மனி ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்குக் கொடுத்தால், பழிக்குப்பழி வாங்குவோம் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்யாவுக்கு சொந்தமான சொத்துக்களை தடை செய்தாலாவது ரஷ்யா அடங்கும் என எதிர்பார்த்தால், அது ரஷ்யாவின் கோபத்தை அதிகரித்துள்ளது.
அதேபோல, ஜேர்மனி முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்குக் கொடுப்பதாக எடுத்துள்ள முடிவும் ரஷ்யாவைப் பணியவைக்காமல் அதன் கோபத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.