டெல்லி: விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால் விமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானபோக்குவரத்து ஒழுங்குமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் மற்றொரு நபர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான பயணத்தின் போது தவறாக நடக்கும் பயணிகள் மீது விமானத்தின் பைலட் மற்றும் பணியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.