வெலிக்கடை பிரதேச சபை தவிசாளர் இன்று (05) சில மணித்தியாலயங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஆசனத்தில் அமர்ந்திருந்தமை தொடர்பிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. தவிசாளர் நீதிமன்றத்தில் உள்ள சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்தார்.
பிரதேச சபையின் இலத்திரனியல் மற்றும் வேறு இருவர் தொடர்பாக நீதிமன்ற விசாரணை இன்று (05) இடம்பெற்றது.
இதற்காக தவிசாளர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்றிருந்த சம்பவம் தொடர்பில் மூவர் இலங்கை மின்சார சபையினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
ருஹூணு கேத்த என்ற பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த விசாரணையின் போது தவிசாளர் நீதிமன்ற ஆசன இருக்கையில் கால் மேல் காலை போட்டு அமர்திருந்தமை தொடர்பில் 3 மணித்தியாலயங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.