வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில்லை: சரத்பவார் பேச்சு

புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜன் ஜகார் யாத்திரை பிரசாரத்தை கட்சியின் தலைவர் சரத் பவார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேசிய சரத்பவார், ‘‘ அதிகாரத்தில் இருப்பவர்கள் விவசாயிகளுக்கு உரிய பலனை வழங்குவதற்கு தயாராக இல்லை. அவர்கள் இடைத்தரகர்களின் நலன்களை பாதுகாத்து சாதாரண மக்களை பணவீக்க பள்ளத்தில் தள்ளுகின்றனர்.

இன்றைய இளைஞர்கள் படித்தவர்கள். வேலையில்லாததால் அவர்களுக்கு திருமணத்துக்கு பெண் தருவதற்கு யாரும் முன்வருவதில்லை. கிராமப்புறங்களில் இந்த பிரச்னை அதிகம் உள்ளது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான ெகாள்கைகளை பின்பற்றுவதற்கு பதிலாக சமூகங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே பிரிவினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.