சென்னை,
2013ம் ஆண்டு சான்பியன்ஸ் டிராபியை தோனி தலமையிலான இளம் படை கைப்பற்றிய பின்னர் இந்திய அணி ஐசிசி நடத்தும் எந்த ஒரு கோப்பையையும் வெல்ல முடியாமல் திணறி வருகிறது. தோனி தலைமையிலான இந்திய அணி 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை, 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை கைப்பற்றி உள்ளது.
இந்திய அணிக்காக அனைத்து வித கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி வைத்துள்ளார்.
2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் நடைபெற்ற முக்கிய தொடர்களான 2014 டி 20 உலக கோப்பை, 2015 ஒருநாள் உலக கோப்பை, 2016 டி20 உலக கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 ஒருநாள் உலககோப்பை,2022 டி 20 உலக கோப்பைகளில் இந்திய அணி நாக் அவுட் சுற்றுகளில் வெளியேறியது. 2021 டி20 உலக கோப்பையில் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வித பெரிய கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பையை வென்று ரசிகர்களுக்கு விருந்து படைக்குமா என பார்க்கலாம்.
இந்நிலையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் கவுதம் கம்பீர் செயல்பட்டது போல் 2023 உலக கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என இந்திய முன்னாள் வீரரும், 1983ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அணியில் அங்கம் வகித்த தமிழக வீரருமான ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
என்ன ஒரு அருமையான உணர்வு அது 1983ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது, அதன் பின்னர் அணியின் தேர்வாளர்களின் தலைவராக இருந்தது ஒரு அருமையான தருணம். 2011 உலக கோப்பை கதையை நான் என் பேரக்குழந்தைகளுக்கு சொல்வேன். முதலாவதாக கவுதம் கம்பீரின் சிறப்பான இன்னிங்ஸ் அபாரமானது, அதுவும் உலக கோப்பை தொடர்ரில், அவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
உலக கோப்பை தொடர் முழுவதும் அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. 2023 உலக கோப்பை தொடரில் விராட் கோலி 2011 உலக கோப்பையில் கவுதம் கம்பீர் செய்ததை போல் அதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நான் நினைக்கிறேன்.
கடந்த காலங்களில் கவுதம் கம்பீர் முக்கியமான ஆட்டங்களில் நிலைத்து நின்று ஆடியதை போல் இந்த முறை அதே வேளையை கோலி செய்வார் என நினைக்கிறேன். இஷன் கிஷன் இரட்டை சதம் அடித்த போது ஒரு முனையில் நின்று தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியை போல இந்த உலக கோப்பையில் அவர் செயல்படுவார்.
இது அனைத்தும் சுதந்திரம், உங்களது வீரர்களுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுங்கள், நீங்கள் விரும்ப்பியதை செய்யுங்கள்,நீங்கள் அவுட் ஆனாலும் பரவாயில்லை உங்களது ஆட்டத்தை ஆடுங்கள் என கூறுங்கள். இந்த அனுகுமுறைதான் அணிக்கு மிக முக்கியம் என்றார்.