வருமான வரி ஸ்லாப்: இன்னும் சில நாட்களின் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் வரி தொடர்பான பெரிய மாற்றங்களுக்கான திட்டத்தை மோடி அரசு வகுத்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லேபுகளை சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக 5 முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் குறைந்த வரி செலுத்தினால் போதுமானதாக இருக்கும். இந்த முறை நடுத்தர மக்களுக்கு பெரிய பரிசை வழங்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளார்.
வரி விதிப்பில் மாற்றம் இருக்கும்
ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை உள்ளவர்களுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கும். அதாவது ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் முன்பை விட குறைவான வரிதான் செலுத்த வேண்டி இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றான.
10 லட்சம் வருமானத்திற்கு 10% வரி மட்டுமே
இந்த பட்ஜெட்டில், 5 முதல் 10 இலட்சம் ரூபாய் வருமானம் கொண்டவர்களின் ஸ்லேபில் பெரிய மாற்றம் இருக்கக்கூடும் என நிதியமைச்சக வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த வருவாய் பிரிவினருக்கு 10 சதவீத புதிய ஸ்லாப் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அதற்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில், இந்த வரி அடுக்குக்கு விலக்கு அறிவிக்கப்படலாம்.
ஊதிய பிரேக்கட்டுக்கு ஏற்ப சம்பளம் மாறும்
இதனுடன், 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் வரியையும் 25 சதவீதமாக அரசாங்கம் குறைக்கலாம். அதற்கு மேல் உள்ள வருமான வரம்புக்கு வரியில் எந்த மாற்றமும் திட்டமிடப்படவில்லை.
இப்போது உள்ள அமைப்பு என்ன?
தற்போது அமைப்பில் 5 வரி அடுக்குகள் உள்ளன. இதில், 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு உண்டு. 2.5 முதல் 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும், 5 முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும், 10 முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 30% வரியும், 20 லட்சத்துக்கு மேல் வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படுகின்றது. இந்த பட்ஜெட்டில் இந்த ஸ்லாப்களுளில் அரசு மேலும் ஒரு புதிய ஸ்லாப்பை சேர்க்கக்கூடும்.