“இந்துத்துவா சக்திகளுக்கு அந்த தைரியம் இல்லை" – காட்டமான வைகோ

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு என அறிவிக்க வேண்டும் என்ற கொள்கைக்காக, கோரிக்கைக்காக உண்ணாவிரம் இருந்து உயிர்கொடுத்தார் சங்கரலிங்கம் நாடார். அவரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு என சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா சொல்லவும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வித்தியாசம் இல்லாமல் ‘தமிழ்நாடு’ என மூன்று முறை சொல்லி சூட்டப்பட்ட இந்த பெயரை மாற்றும் விதத்தில் ‘தமிழகம்’ என்று அழைக்கலாம் என எங்கோ இருந்து வந்து, அகந்தையின் உச்சக்கட்டதில், ஆணவத்தின் உச்சக்கட்டத்தில் இந்த மாநிலத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய திமிர் வாதத்தை காட்டியிருக்கிறார்.

வைகோ

இது கோடிக்கணக்கான மக்களுடைய. விருப்பம், அண்ணா சூட்டிய பெயர், சங்கரலிங்கனார் உயிர்கொடுத்து பெற்றுக்கொடுத்த பெயரை மாற்றுவோம் எனச்சொல்வதற்கு இவர் யார். அரசாங்கத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு இப்படிப்பட்ட திமிர்வாதம் பேசுகின்ற இந்த ஆளுநர் இங்கே இருந்து அகற்றப்பட வேண்டும், நீக்கப்படவேண்டும்.

சொன்ன வார்த்தையை திரும்பெற்றுக்கொள்கிறேன், தவறாக சொல்லிவிட்டேன் என்று ஆளுநர் சொல்லவேண்டும். நான் கடுமையான கண்டனத்தை ஆளுநருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அது அவருடைய தனிப்பட்ட கருத்தோ என்னமோ. அவரை பின்னால் இருந்து இயக்குவது சங்பரிவார், இந்துத்துவா சக்திகள். இந்துத்துவா சக்திகளுக்கு அந்த தைரியம் இல்லை. இவரை ஊதுகுழலாக வைத்துக்கொண்டு இந்த கருத்தை சொல்லுகிறார்கள்” என்றார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ

இதற்கிடையே வேறு கேள்வி கேட்க முயன்ற செய்தியளர்களிடம் ‘இதை மட்டும் போடுங்க’ என சொல்லிவிட்டு புறப்பட முயன்றார் வைகோ. அப்போது, “அண்ணாமலையின் செயல்பாடுகள் சமீபத்தில் எப்படி இருக்கிறது” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “நல்லா இருக்கு” என வைகோ சொல்கிவிட்டு புறப்படவும், சுற்றி நின்ற நிர்வாகிகளும் சத்தமாக சிரித்துவிட்டு கலைந்து சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.