வாஷிங்டன்: உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த சில மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு 3 பில்லியன் டாலர் மதிப்பலான ராணுவ உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. இது உக்ரைனுக்கான மிகப்பெரிய ராணுவ உதவி என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement