லக்னோ: உத்தர பிரதேசத்தில் நிலவிவரும் கடும் குளிரால் கான்பூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடும் குளிரால் ரத்த அழுத்த அதிகரிப்பு மற்றும் ரத்த உறைவதால் ஏற்படும் மாரடைப்பு, மூளை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.