திருவிடைமருதூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி நடுவக்கரையில் வசிப்பவர் முருகன் (50). அதிமுக கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர். இவர் மீது கொலை வழக்கு உள்ளது. இவரது கூட்டாளியான, திருபுவனம் குருமூர்த்தி (23), ரவுடி பட்டியலில் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முருகன் வீட்டுக்கு சென்று குருமூர்த்தியும், அவரது நண்பரும் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் முருகன் வீட்டின் அருகே நாட்டு குண்டை குருமூர்த்தி வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.