ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம்? திமுக எம்.எல்.ஏ போட்ட புது குண்டு!

முன்னா முதலமைச்சர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததிலிருந்தே வதந்திகளும், யூகங்களும் கிளம்பின. ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு, என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது, அவர் எப்படி இருக்கிறார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவிக்கப்படாததால் வதந்திகள் பரவ காரணமாக அமைந்தது.

ஜெயலலிதா உயிரிழந்த பின்னரும் சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. அவர் எப்போது இறந்தார் என்ற கேள்வி எழுந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனாலும் ஜெயலலிதா மரணித்த தேதி தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் உலா வருகின்றன.

இந்த சூழலில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்து எம்.எல்.ஏ ஆன விளாத்திகுளம் மார்கண்டேயன் ஜெயலலிதாவை கொன்றது மோடி தான் என பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில், திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை அந்தக் கட்சியில் (அதிமுக) இருந்தேன். ஜெயலலிதா இறந்துவிட்டார். அவரை மோடிதான் கொன்றுவிட்டார். காரணம் பிரதமர் வேட்பாளராக நிற்க போவதாக கூறியதால் பிஜேபி-தான் கொன்றுவிட்டது என்று பகிரங்கமாக நான் குற்றம் சாட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர், தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்த வாக்குறுதி அனைத்தும் கிட்டத்தட்ட நிறைவேற்றிவிட்டோம் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.