இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர் 8ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியரின் காதல் கடிதம்
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள சதார் கொத்வாலி என்கிற கிராமத்தில் இயங்கி வரும் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் ஹரி ஓம் சிங் என்ற ஆசிரியர், 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஒருவருக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து இருக்கிறார்.
ஆசிரியரின் அந்த காதல் கடிதத்தில், உன்னை நான் அதிகம் விரும்புகிறேன். விடுமுறை காலத்தில் நீ இல்லாதது எனக்கு மிகுந்த வருத்தம் தருகிறது. உன்னால் எப்போது முடியுமோ அப்போது தொலைபேசி வழியாக என்னிடம் தவறாமல் பேசு. தேர்வு கால விடுமுறை விடுவதற்கு முன்பு தனியாக என்னை நீ வந்து சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உன்னை திருமணம் செய்து கொள்ளவும் நான் விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 12 வரிகள் உள்ள அந்த காதல் கடிதத்தில், குறிப்பாக ஆசிரியர் ஹரி ஓம் சிங்(47) இந்த கடிதத்தை படித்து முடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் கிழித்து எறிந்து விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
இந்நிலையில் ஆசிரியரின் காதல் கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்த 8ம் வகுப்பு மாணவி என்ன செய்வது என்று தெரியாமல், அந்த கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டியுள்ளார்.
ஆசிரியரின் கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, ஆசிரியரின் தொலைபேசியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அந்த ஆசிரியர் மாணவியின் தந்தையிடம் அடாவடியாக தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதனால் பீதியடைந்த மாணவியின் தந்தை பொலிஸில் புகார் அளித்துள்ளார், அதனடிப்படையில் கன்னோஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழக்கு பதிவு செய்து ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.