சென்னை: ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களுடன், தொழிலாளர் நலத்துறை தரப்பில் நடைபெற்ற 2வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இதனால், திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகி உள்ளதாக தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு மின்வாரியத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 1ந்தேதி அமல்படுத்த வேண்டிய ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம், 56ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வரும் 10-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக […]