சண்டிகர்பஞ்சாப் மாநிலத்தில் போலீசாரும், எல்லை பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய வேட்டையில் போதைப் பொருள் கடத்தலின் முக்கிய புள்ளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து, 155 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு நம் அண்டை நாடான பாகிஸ்தானில்இருந்து போதைப்பொருள் அதிகளவு கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை தடுக்கும் வகையில் பஞ்சாப் போலீசார், எல்லை பாதுகாப்புப் படையினருடன் இணைந்து எல்லை பகுதியில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பசில்கா மாவட்ட எல்லையில் நடந்த சோதனையில் போதைப்பொருள் கடத்தி வந்த இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த 31 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.அவற்றின் சர்வதேச மதிப்பு 155 கோடி ரூபாய்.
இதேபோல், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே வனஸ்தாலிபுரம் என்ற பகுதியில், போதைப் பொருள் பயன்படுத்தியதாக, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த இளைஞரை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ‘கோகைன்’ என்ற போதைப் பொருள் கலந்த பானத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர் போலி விசா பயன்படுத்தி, சட்டவிரோதமாக நம் நாட்டில்தங்கி இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர்.
மேலும், போலி ஆவணங்களை பயன்படுத்தி 400 ‘சிம்’ கார்டுகளை வாங்கி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement