உலக உணவுகளின் விலை 2022இல் வரலாறு காணாத உயர்வை எட்டி இருப்பதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் ஏற்பட்ட இடையூறு மற்றும் ஏற்றுமதி பற்றாக்குறை ஆகியவற்றால் கடந்த ஆண்டு பெரும்பாலான உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது.
இவை ஐ.நா உணவு முகமையின் சராசரி விலை குறியீட்டை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த நிலைக்கு அனுப்பியது.
அதிகரிக்கும் உணவுப் பொருட்களின் விலை
இந்நிலையில் உலக அளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களின் சர்வதேச விலைகளைக் கண்காணிக்கும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்(FAO) கடந்த 2021ம் ஆண்டில் இருந்து 14.3% புள்ளிகள் உயர்ந்து 2022ம் ஆண்டு 143.7 என்ற சராசரி நிலையை உணவு விலைக் குறியீடு அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் இது 1990ல் பதிவுகள் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய உச்சம் என்றும் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
REUTERS
கொரோனா தொற்றில் இருந்து உலக பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டு இருந்த 2021ம் ஆண்டிலேயே உணவு குறியீட்டு எண் 28% அதிகரித்து இருந்தது.
2022 ஆம் ஆண்டு முழுவதும், FAO இன் ஐந்து உணவுத் துணைக் குறியீடுகளில் நான்கு – தானியங்கள், இறைச்சி, பால் மற்றும் தாவர எண்ணெய்கள் சாதனையின் உச்சத்தை எட்டியுள்ளன, அதைப்போல ஐந்தாவதான சர்க்கரை, 10 வருட உயர்வில் இருந்தது.
FAO தலைமைப் பொருளாதார நிபுணர் மாக்சிமோ டோரெரோ, “இரண்டு மிகவும் நிலையற்ற ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியான உணவுப் பொருட்களின் விலைகள் வரவேற்கப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.