வீடுகளில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் Association of Entomological Officers தெரிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திசாநாயக்க இதுதொடர்பாக தெரிவிக்கையில், தற்போது செயல்படுத்தப்படும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் வெப்ப புகை விசிறல் நடவடிக்கையிலும் பார்க்க ,குளிர் புகை விசிறல் முறை பொருத்தமானது என தெரிவித்தார்.
தற்போது பெரும்பாலான நாடுகளில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த பல நாடுகள் குளிர் புகை விசிறல் முறையை பயன்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.