இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் முன்னாள் ராணுவ தளபதிக்கு தொடர்பு இருப்பதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் பவாத் சவுதாரி குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால் ஆட்சி கவிழ்ந்தது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் பவாத் சவுதாரி, “பிடிஐ ஆட்சிக்கு வர 22 ஆண்டுகளானது. ஆனால் சதியினால் வெளியேற்றப்பட்டது. இந்த சதியில் சில ராணுவ தளபதிகளுக்கு தொடர்பு இருக்கிறது,’’ என்று மறைமுகமாக முன்னாள் ராணுவ தளபதி ஜாவித் பஜ்வாவை குறிப்பிட்டு குற்றம் சாட்டினார்.