உங்கள் கல்லீரலை காலி செய்யும் மோசமான உணவுகள் இவைதான்! உஷார்


மனித உடலில் பல உறுப்புகள் இருந்தாலும், சில உறுப்புகள் மிகவும் முக்கியமானது. அதில் முதன்மையானது தான் கல்லீரல்..!
கல்லீரல் நோய் தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரையும் தாக்குகிறது. இதற்கு காரணம் தவறான உணவுமுறை தான்.

கல்லீரலுக்கு பாதிப்புகள் கொடுக்கும் உணவுகள்

பாக்கெட் உணவுகள்

தொகுக்கப்பட்ட சிற்றுண்டிகள் உங்கள் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தொகுக்கப்பட்ட உணவுகளில் பொதுவாக உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இவை அனைத்துமே உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. எனவே இந்த வகையான உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் விதைகள், மக்கானா, குயினோவா போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

உங்கள் கல்லீரலை காலி செய்யும் மோசமான உணவுகள் இவைதான்! உஷார் | Liver Foods Damage Health Tamil

healthifyme

வெண்ணெய்

பெரும்பாலும் பால் தொடர்பான உணவு பொருட்கள் அனைத்தும் கல்லீரலில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக உள்ளன. அவற்றில் வெண்ணையும் அடங்கும். ஏனெனில் இதில் அதிக அளவு நிறைவுற்ற கொழுப்பு உள்ளது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. இவை கல்லீரலுக்கும் தீங்கிழைக்கின்றன. எனவே அதற்கு பதிலாக நீங்கள் ஆலிவ் எண்ணெய்க்கு மாறலாம்.

அதிக சர்க்கரை வேண்டாம்

அதிகப்படியான சர்க்கரை எடுப்பது கல்லீரலில் கொழுப்பு தேங்க வழி வகுக்கிறது. காரணம் சர்க்கரை கொழுப்பாக மாற்றப்பட்டு கல்லீரலில் தங்கி விடுகிறது. இதனால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும்.

உங்கள் கல்லீரலை காலி செய்யும் மோசமான உணவுகள் இவைதான்! உஷார் | Liver Foods Damage Health Tamil

niddk

அதிக உப்புக்கு நோ சொல்லுங்கள்

அதிகப்படியான உப்பால் (சோடியம்) கல்லீரலில் நார்த்திசுக்கட்டிகள் உருவாக வாய்ப்புள்ளது. இது கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், டப்பாக்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், உப்பு சேர்க்கப்பட்ட ஊறுகாய்கள் போன்றவற்றை தவிருங்கள்.

சிவப்பு இறைச்சி

சிவப்பு சாப்பிடுவதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது கெட்ட செய்தியாக இருந்தாலும் நிதர்சனமான உண்மை இது. உங்கள் கல்லீரலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் சிவப்பு இரைச்சிகளை ஜீரணிக்க கல்லீரல் மிகவும் கஷ்டப்படும்.

அதோடு, அதிகப்படியான புரதம் கல்லீரலில் கொழுப்பு படித்து ஃபேட்டி லீவர் என்ற நோயை ஏற்படுத்தும். 

உங்கள் கல்லீரலை காலி செய்யும் மோசமான உணவுகள் இவைதான்! உஷார் | Liver Foods Damage Health Tamil

AP



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.