கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஓசூர் அருகே தேசியநெடுசாலையில் பைக் மீது மோதி கர்நாடக பேருந்து தீப்பிடித்து எரிந்தது. கர்நாடக பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தரேசன், கணேசன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் முழுவதுமாக தீப்பிடித்து கர்நாடக பேருந்து எரிந்தது.
