விளாடிமிர் புடினின் கொடூரமான படையெடுப்பால் உக்ரைனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறார்களையும் விட்டுவைக்கவில்லை
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 36 மணி நேர போர் நிறுத்தத்தை ஜனாதிபதி புடின் அறிவித்திருந்தார்.
ஆனால் குறித்த அறிவிப்பை ரஷ்ய துருப்புகளே மதிக்கவில்லை என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அப்படியான போர் நிறுத்த நடவடிக்கையை ஏற்க முடியாது எனவும் அறிவித்துள்ளது.
@epa
இந்த நிலையிலேயே புடினின் துருப்புகள் சிறார்களையும் விட்டுவைக்கவில்லை என உக்ரைன் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், போர் தொடங்கிய பின்னர் ரஷ்ய துருப்புகளால் 453 உக்ரைன் சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் பல சிறார்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உக்ரைன் கடுமையான குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரோன்களால் தாக்கி அழித்து வருகிறது
மக்கள் மின்சாரத்தை சேமிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த அக்டோபரில் இருந்தே, ரஷ்ய துருப்புகள் ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் மின் கட்டமைப்புகளை தாக்கி அழித்து வருகிறது.
@getty
இதனால் தண்ணீர் பற்றாக்குறை உட்பட பல மணி நேர மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கீவில் -11C வரையில் வெப்பநிலை சரிவடையும் எனவும் கிழக்கு உக்ரைனில் வெப்பநிலை -18C வரையில் சரிவடையும் எனவும் கருதுகின்றனர்.
இதனால் மின் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள் ராணுவ உதவி வழங்க மீண்டும் முன்வந்துள்ளதை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வரவேற்றுள்ளார்.