சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
