திருமலையில் தங்கும் அறைகளின் வாடகை உயர்வு

திருமலை: திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 7,000 அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது.

இந்நிலையில் கவுஸ்தபம், நந்தகம், பாஞ்ச ஜன்யம், வகுலமாதா தங்கும் அறைகள் ரூ. 600 லிருந்து ரூ. 1000 ஆக வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. இம்மாதம் 1ம் தேதி முதல் நாராயணகிரி தங்கும் விடுதிகளில் ரூ. 150-ல் இருந்து ரூ. 750 ஆக வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது.

நாராயணகிரி- 4 விடுதிகளில் ஒவ்வொரு அறையும் ரூ.750-ல்இருந்து ரூ. 1,700 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கார்னர் சூட் வாடகை ரூ. 2,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்பெஷல் டைப் காட்டேஜ் வகைகள் ரூ. 750-ல் இருந்து ரூ. 2,800 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ரூ. 50 வாடகைக்கு விடப்படும் எஸ்.எம்.சி, எஸ்.என்.சி, ஏ.எஸ்.சி, எஸ்.வி.சி போன்ற விடுதிகள் மற்றும் ரூ.100 வாடகை பெறப்படும் ராம்பக்கீச்சா, வராக சுவாமி, எஸ்என்ஜிஎச், எச்விடி. சிஏடிசி,டிபிசி, சப்தகிரி வாடகை விடுதிகளின் வாடகையும் பன் மடங்குஉயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகன கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது. திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் பேருந்து கட்டணம், லட்டு, வடை பிரசாத விலையும் ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.