நீயில்லாத விடுமுறை வருத்தம் தரும் உண்மையான அன்பு இருந்தால் தனியாக வந்து சந்திக்கவும்…: 13 வயது மாணவிக்கு காதல் கடிதம் 47 வயது ஆசிரியர் சஸ்பெண்ட்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 47 வயது ஆசிரியர் 13 வயது மாணவிக்கு தனியாக சந்திக்க வரவும் என காதல் கடிதம் எழுதியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் சதார் கொத்வாலி கிராமத்தில் உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவி ஒருவருக்கு ஹரி ஓம் சிங் ( 47) என்ற ஆசிரியர் காதல் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில், உன்னை அதிகம் விரும்புகிறேன். விடுமுறை காலத்தில் நீயில்லாதது அதிக வருத்தம் தரும். எப்போது முடியுமோ அப்போது, தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு என்னிடம் பேசு. தேர்வு கால விடுமுறை விடுவதற்கு முன்பு தனியாக என்னை வந்து சந்திக்க வேண்டும்.

என் மேல்  உனக்கு உண்மையான காதல் உனக்கு இருந்தால் நிச்சயம் வந்து என்னை சந்திப்பாய். உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்று ஆசிரியர் தெரிவித்து உள்ளார். 12 வரிகள் கொண்ட அந்த கடிதத்தில் உள்ள விசயங்களை படித்து அதிர்ச்சி அடைந்து தந்தையிடம் தெரிவித்தார். ஆசிரியரை மாணவியின் தந்தை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியதற்கு அவர், தன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என கூறியதுடன், தொடர்ந்து துன்புறுத்தினால் மாணவியை கடத்தி சென்று விடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.  மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் ஹரிஓம்சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.