திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 6,7,8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் , பூனாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு இருக்கை வசதிகளை ரூபாய் 20 லட்சம் மதிப்பில் டெஸ்க் பெஞ்ச்களை பெரம்பலூர் தொகுதி எம்பி பச்சமுத்து அவரது சொந்த நிதியிலிருந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அறிஞர் அண்ணா காலத்திருந்து பிரிவினை பற்றிய பேசிய நாடு தமிழ்நாடு. அதனால் தான் பல மாநிலங்களில் அந்த நிலை இல்லை. தனிநாடு பற்றி பேசுபவர்கள் பிரிவினைவாத சிந்தனையுள்ளவர்களே. பிரிவினை பற்றி அன்று பேசியவர்கள் தான் மீண்டும் தமிழ்நாடு என்பது பற்றி பேசி வருகின்றனர். தமிழ்நாடு என்று சொல்வதில் தப்பில்லை. ஆனால் பிரிவினைவாதிகள் இதை பற்றி பேசுபவர்கள் என்று கவர்னர் சொல்வதில் எவ்வித தப்பும் இல்லை.
இந்தியா உலக நாடுகளில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் பாரத பிரதமர் கடுமையாக உழைத்து வருகிறார் அந்த உழைப்பு வீண் போகாமல் இருப்பதற்காக சில பிரிவினை வாதம் ஏற்பட்டு மாநிலங்களின் ஒற்றுமை சீர்குலைந்துவிடாமல் இருப்பதற்காக தான் மாநில கவர்னர் இதுபோன்ற கருத்துக்களை கூறுகின்றார்.
வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு என்பது தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கும் சூழ்நிலையில் அப்போதைய நிலைப்பாடு என்னவோ அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும். குறிப்பாக மத்திய அரசு அங்கம் வகிக்கும் ஒரு கட்சியில் தான் கூட்டணி இருப்பது சிறந்தது கடந்த முறை ஒரு சில குளறுபடிகள் எல்லாம் கூட்டணி ஏற்பட்டது அந்த நிலை மீண்டும் தொடர வாய்ப்பு இல்லை.
பிஜேபி மாநில தலைவர் இவ்வளவு சின்ன வயசுல ஒரு பெரிய பதவிக்கு வந்து இருக்கார். மிகச்சிறந்த அறிவாளி. அவர் இல்லனா இன்னைக்கு எதிர்க்கட்சி இல்லாமல் போயிருக்கும். கையில் அத்தனை டேட்டா வைத்திருக்கிறார். ஐபிஎஸ் வரைக்கும் படிப்பது சாதாரண காரியமல்ல அத்தனை டேட்டா வைத்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு தேவையான ஒரு சிறந்த தலைவர் இப்போது பிஜேபியில் இருக்கிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் நடந்து கொண்டது தவறு.செய்தியாளர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.பத்திரிகையாளரின் தேவையற்ற அழுத்தத்தால் வந்ததுதான் அந்த நிலைமை என்று பச்சமுத்து கூறினார்.
விழாவில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெயசீலன், உயர்மட்டக் குழு உறுப்பினர் சத்தியநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில மகளிரணி செயலாளர் அமுதா, மாநில இளைஞரணி செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இரு பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.